Blog Y3 793 - "Held by God's Sovereign Love"

The Lord is good to all, and His tender mercies are over all His works. Psalm 145:9. 

No one is good except our Lord God; these words came from the very mouth of our Lord Jesus Christ. Nothing came into existence on its own; God created everything in heaven and on earth. He created all things for us, but He created us for Himself.

God is the Creator of everything, and He continues to care for all that He has made lovingly. Our Lord Himself said that not even a sparrow falls to the ground apart from the will of the Father. If God is so mindful of a tiny sparrow, how much more concerned and attentive will He be toward us!

That is why the Scripture declares that the Lord is good to all. He created human beings a little lower than the angels, yet He appointed the angels as ministering spirits to help us. His mercy endures forever, and His care never ceases. He watches over all creation, and we, being the crown of His creation, are especially precious to Him.

This truth and confidence can lift our spirits whenever we feel weary or discouraged. When our hearts are downcast, let us remember: the God who created everything, who loves us deeply, is fully in control. May this bring strength and peace to every heart. 

Reflection: Am I truly living with confidence, knowing I am deeply valued, carefully watched over, and sustained by the One who formed all things and governs every detail of my life?

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. சங்கீதம் 145:9.

நம் ஆண்டவராகிய தேவனைத் தவிர வேறு எவரும் நல்லவர் அல்ல; இந்த வார்த்தைகள் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாயிலிருந்தே வந்தவை. இந்த உலகில் எதுவும் தானாகத் தோன்றிவிடவில்லை; வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் தேவனே படைத்தார். அவர் எல்லாவற்றையும் நமக்காகப் படைத்தார், ஆனால் நம்மைத் தமக்காகவே படைத்தார்.

தேவன் அனைத்தையும் படைத்தவர், தாம் படைத்த அனைத்தையும் அவர் தொடர்ந்து அன்போடு பராமரித்து வருகிறார். பிதாவின் சித்தமின்றி ஒரு அடைக்கலான் குருவிகூட தரையில் விழாது என்று நம் ஆண்டவர் தாமே கூறினார். தேவன் ஒரு சிறிய குருவியின் மேலேயே இவ்வளவு கவனமாக இருக்கிறார் என்றால், அவருடைய சாயலில் படைக்கப்பட்ட நம்மேல் அவர் இன்னும் எவ்வளவு அக்கறையுடனும் கவனத்துடனும் இருப்பார்!

இதனால்தான், கர்த்தர் எல்லாருக்கும் நல்லவர் என்று வேதம் அறிவிக்கிறது. அவர் மனிதர்களைத் தூதர்களிலும் சற்றுச் சிறியவர்களாகப் படைத்தார், இருப்பினும் நமக்கு உதவுவதற்காகத் தேவதூதர்களைப் பணிவிடை ஆவிகளாக நியமித்தார். அவருடைய கிருபை என்றும் நிலைத்துள்ளது, அவருடைய பராமரிப்பு ஒருபோதும் முடிவதில்லை. அவர் படைப்புகள் அனைத்தையும் கண்காணிக்கிறார்; அவருடைய படைப்பின் கிரீடமாகிய நாம், அவருக்கு மிகவும் விசேஷமானவர்கள்.

நாம் சோர்வடையும்போது அல்லது மனந்தளரும்போது இந்த உண்மையும் நம்பிக்கையும் நம் ஆத்துமாவைத் திடப்படுத்தும். நம் இருதயம் சோர்ந்து போகும்போது நாம் இதை நினைவுகூர்வோம்: அனைத்தையும் படைத்தவர், நம்மை ஆழமாக நேசிப்பவர், எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இது ஒவ்வொரு இருதயத்திற்கும் பெலத்தையும் சமாதானத்தையும் தருவதாக.

சிந்ததிக்க: நான் மிகவும் நேசிக்கப்பட்டு, கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, அனைத்தையும் உருவாக்கி என் வாழ்வின் ஒவ்வொரு விவரத்தையும் வழிநடத்துபவரால் தாங்கப்படுகிறேன் என்பதை அறிந்து, நான் உண்மையிலேயே நம்பிக்கையுடன் வாழ்கிறேனா?

 

Comments

  1. Matthew 8:8 states - I’m not worthy that you should enter under my roof but if you just say a word,my soul shall be healed !!
    Thank you lord ,inspite of our drawbacks you still bless us because we are Gods creation,although next go angels ,yet you keep angels to protect us lord !
    Isaiah 52:12 - For you shall not go out with haste, nor go by flight; for the LORD will go before you, and the God of Israel will be your rear guard"
    You are our leader and protector!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"