When you eat the labor of your hands, you shall be happy, and it shall be well with you. Psalm 128:2.
This blessing follows those who fear the Lord and walk in His ways. Many people work hard, but not everyone enjoys the fruit of their labor. Our God does not delight in giving our blessings into the hands of others. When we remain in God’s hand, and when His mighty hand rests upon us, the work of our hands will surely be blessed.
Even if the enemy tries to steal what God has given us, our Almighty God will not allow him to succeed. Our Father never abandons us to the enemy. Whatever has been stolen, our God is able to restore fully and abundantly.
We are in God’s hand, and His mighty hand is upon us. Therefore, we shall be happy, and it shall be well with us. With this confidence, let us rejoice and enjoy our Father’s presence each and every day.
Reflection: Am I trusting that I remain secure in God’s strength, and am I believing that He can bring back everything I feel has slipped from my hands?
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். சங்கீதம் 128:2.
கர்த்தருக்குப் பயந்து, அவருடைய வழிகளில் நடப்பவர்களை இந்த ஆசீர்வாதம் தொடர்கிறது. பலர் கடினமாக உழைக்கிறார்கள்; ஆனால் எல்லோரும் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிப்பதில்லை. நம்முடைய ஆசீர்வாதங்களை மற்றவர்களின் கைகளில் கொடுப்பதில் நம் தேவன் பிரியப்படுவதில்லை. நாம் தேவனுடைய கரத்தில் நிலைத்திருக்கும்போதும், அவருடைய வல்லமையுள்ள கரம் நம்மேல் தங்கியிருக்கும்போதும், நம் கைகளின் கிரியைகள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படும்.
தேவன் நமக்குத் தந்திருப்பதை எதிரி திருட முயன்றாலும், அவன் வெற்றிபெற நம் சர்வவல்லமையுள்ள தேவன் அனுமதிக்கமாட்டார். நம் பிதா நம்மை ஒருபோதும் எதிரியின் கைகளில் விட்டுவிடுவதில்லை. நம்மிடமிருந்து திருடப்பட்டது எதுவாக இருந்தாலும், நம் தேவன் அதை முழுமையாகவும் பரிபூரணமாகவும் மீண்டும் கொடுக்க வல்லவராயிருக்கிறார்.
நாம் தேவனுடைய கரத்தில் இருக்கிறோம், அவருடைய வல்லமையுள்ள கரம் நம்மேல் இருக்கிறது. ஆகையால், நாம் மகிழ்ச்சியாய் இருப்போம், எல்லாம் நமக்கு நன்மையாகவே முடியும். இந்த நம்பிக்கையுடன், ஒவ்வொரு நாளும் நம் பிதாவின் பிரசன்னத்தில் மகிழ்ந்து களிகூருவோம்.
சிந்திக்க: நான் தேவனுடைய பெலத்திற்குள் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று நம்பி, என் கைகளிலிருந்து நழுவிப்போன அனைத்தையும் அவர் மீண்டும் கொண்டுவருவார் என்று நான் விசுவாசிக்கிறேனா?
John 10:10 reads: "The thief comes only to steal and kill and destroy; I have come that they may have life, and have it to the full"
ReplyDeleteYes Lord ,you bless our work and give us abundant life!