Blog Y3 812 - "The Lord is Our Strength"

The Lord is my strength and my shield; My heart trusted in Him, and I am helped; Therefore my heart greatly rejoices, and with my song I will praise Him. Psalm 28:7. 

In ancient times, the warrior's strength in battle was very important, and his shield protected him from the enemy's weapons. King David, as a warrior, explained how the LORD had helped him win battles. In the same way, the Lord God protects, empowers, and guards us. When our lives feel heavy and we do not know what to do, the Lord becomes our support and our safety. 

King David continues, “My heart trusted in Him, and I am helped.” He chose to trust God first; because of that, the Lord’s help came to him, and he says, “I am helped.” Trusting God means believing that He cares, listens, and will act at the right time. Sometimes the help comes as strength to endure. Sometimes it comes as a clear answer or a new path. But when we truly place our confidence in Him, He does not leave us alone.

Because God helped him, David says, “My heart greatly rejoices, and with my song I will praise Him.” This reminds us of James 5:15.“Is anyone cheerful? Let him sing psalms.” When we recollect our past and think about how God has carried us through hard times, joy fills our hearts. And our hearts fill with sincere words of praise to God. 

Therefore, it is now our turn to rejoice and praise Him with our whole heart. Let our trust produce joy. Let our joy produce worship. And let our worship glorify our faithful God.

Reflection: Are we remembering how often we were carried, and are we letting those memories awaken deeper praise in the places where we once felt weak?

கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன். சங்கீதம் 28:7.

முந்திய காலங்களில், போர்க்களத்தில் ஒரு போர்வீரனின் பலம் மிக முக்கியமானது, அவனுடைய கேடகம் எதிரியின் ஆயுதங்களிலிருந்து அவனைப் பாதுகாத்தது. ஒரு போர்வீரனாக இருந்த ராஜாவாகிய தாவீது, யுத்தங்களில் வெற்றிபெற கர்த்தர் எப்படித் தமக்கு உதவினார் என்பதை விளக்குகிறார். அதேபோல, தேவனாகிய கர்த்தர் நம்மையும் பாதுகாக்கிறார், பலப்படுத்துகிறார் மற்றும் அரணாக நிற்கிறார். நம் வாழ்க்கை பாரமாகத் தோன்றும்போதும், என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும்போதும், கர்த்தர் நமக்கு ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் மாறுகிறார்.

தொடர்ந்து தாவீது ராஜா, "என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்" என்கிறார். அவர் முதலாவது தேவனை நம்புவதைத் தேர்ந்தெடுத்தார்; அதனால்தான் கர்த்தருடைய உதவி அவருக்குக் கிடைத்தது, "நான் சகாயம் பெற்றேன்" என்றும் அவர் கூறுகிறார். தேவனை நம்புவது என்பது அவர் நம்மேல் அக்கறையுள்ளவர், நம் விண்ணப்பத்தைக் கேட்கிறவர் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவார் என்று விசுவாசிப்பதாகும். சில நேரங்களில் அந்த உதவி சகித்துக்கொள்ளும் பலமாக வரும். சில நேரங்களில் அது தெளிவான பதிலாகவோ அல்லது புதிய பாதையாகவோ வரும். ஆனால் நாம் உண்மையாகவே அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நம்மைத் தனியாக விடுவதில்லை.

தேவன் தமக்கு உதவியதால், தாவீது: "என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்" என்கிறார். இது யாக்கோபு 5:13-ல் உள்ள "ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்" என்ற வசனத்தை நமக்கு நினைவூட்டுகிறது. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, கடினமான காலங்களில் தேவன் நம்மை எப்படித் தாங்கினார் என்று சிந்திக்கும்போது, நம் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. அந்த மகிழ்ச்சி தேவனுக்குச் செலுத்தும் உண்மையான துதி வார்த்தைகளாக வெளிப்படுகிறது.

ஆகவே, இப்போது நம் முழு இருதயத்தோடும் மகிழ்ச்சியடைந்து அவரைத் துதிப்பதற்கான நேரம் இது. நமது நம்பிக்கை மகிழ்ச்சியை உருவாக்கட்டும். நமது மகிழ்ச்சி ஆராதனையை உருவாக்கட்டும். நமது ஆராதனை உண்மையுள்ள நம் தேவனை மகிமைப்படுத்தட்டும்.

சிந்திக்க: நாம் எத்தனை முறை தேவன் நம்மை தூக்கி சுமந்தார் என்பதை நினைவு கூர்ந்து,  நாம் பலவீனமாக உணர்ந்த தருணங்களில் தேவன் செய்த நன்மைகளை நினைத்து, அந்த நினைவுகள் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து  துதியை எழும்பச் செய்கிறதா?

 

Comments

  1. Lord, I will praise You in the storm.

    Not just when the skies are clear.
    Not only when prayers are answered quickly.
    Not only when life feels calm and predictable.

    But here. In the wind. In the waves. In the chaos .you are a faithful God

    As the psalmist trusted in you and was helped ,so we look up to the mountains,my help comes from the lord,maker of heaven and earth !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"