Blog Y3 848 - "Restored by His Mercy"
Then the Lord your God will bring you to the land which your fathers possessed, and you shall possess it. He will prosper you and multiply you more than your fathers. Deuteronomy 30:5.
The word “Then” is very powerful. It reminds us that God’s promises often follow a response from us.
Before this promise, the Lord speaks about a people who were scattered, burdened, and living in the consequences of disobedience. Yet, in His mercy, He lovingly calls them back to Himself.
Our God, in His compassion, desires that we turn to Him with all our heart and soul. When we truly return, repenting, surrendering, and seeking His presence, something beautiful happens.
Then…………
- He gathers us from every place of loss and scattering.
- He restores what was broken.
- He removes our desire for sin and gives us a heart that loves and obeys Him.
What a gracious Father we have!
The Lord does not stop at restoration. He goes beyond it. He promises to prosper us and multiply us more than our fathers, blessing us not only physically, but even more richly in our spiritual lives.
So today, let us take a step forward. Let us humble ourselves, recognize where we have fallen short, and return to our loving Father.
showing compassion, restoring our lives, and blessing us abundantly beyond measure.
May this word encourage our hearts to return to Him fully and walk in His promises.
Reflection: What then happens when my heart turns fully toward Him, trusting that His compassion can gather every scattered place in my life and lead me into the fullness He has prepared?
(அப்பொழுது) உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார். உபாகமம் 30:5.
"அப்பொழுது" என்ற வார்த்தை மிகவும் வல்லமையானது. தேவனின் வாக்குத்தத்தங்கள் பெரும்பாலும் நம்முடைய கீழ்ப்படிதலான செயல்பாட்டைத் தொடர்ந்தே நிறைவேறுகின்றன என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த வாக்குத்தத்தத்திற்கு முன்பு, சிதறடிக்கப்பட்டு, பாரஞ்சுமந்து, கீழ்ப்படியாமைக்கான விளைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஜனத்தைப் பற்றி கர்த்தர் பேசுகிறார். ஆனாலும், தமது இரக்கத்தினால், அவர் அவர்களைத் தம்மிடத்திற்கு அன்புடன் அழைக்கிறார்.
நம்முடைய தேவன், தமது பரிவினால், நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தம்மிடம் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார். நாம் உண்மையிலேயே மனந்திரும்பி, நம்மை அர்ப்பணித்து, அவருடைய சமூகத்தைத் தேடித் திரும்பும்போது, ஒரு அழகான காரியம் நிகழ்கிறது.
அப்பொழுது…………
இழப்பு மற்றும் சிதறடிக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர் நம்மை கூட்டிச் சேர்க்கிறார்.
உடைந்ததை அவர் புதுப்பிக்கிறார்.
பாவத்தின் மீதான நம் விருப்பத்தை அகற்றி, அவரை நேசிக்கும் மற்றும் அவருக்குக் கீழ்ப்படியும் இருதயத்தை நமக்குத் தருகிறார்.
நாம் எப்பேர்ப்பட்ட கிருபையுள்ள பிதாவைக் கொண்டிருக்கிறோம்!
கர்த்தர் நம்மைப் புதுப்பிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதற்கும் மேலாக அவர் செயல்படுகிறார். நம் பிதாக்களைக் காட்டிலும் நம்மைச் செழிக்கச் செய்து பெருகப்பண்ணுவதாக அவர் வாக்குத்தத்தம் அளிக்கிறார்; இது சரீர பிரகாரமான ஆசீர்வாதம் மட்டுமல்ல, நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இன்னும் வளமான ஆசீர்வாதமாகும்.
எனவே இன்று, நாம் ஒரு அடி முன்னோக்கி வைப்போம். நம்மை நாமே தாழ்த்தி, நாம் எங்கு தவறிவிட்டோம் என்பதை உணர்ந்து, அன்பான நம் பிதாவிடம் திரும்புவோம்.
நாம் நமது பங்கைச் செய்யும்போது... "அப்பொழுது" தேவன் நிச்சயமாகத் தம்முடைய பங்கைச் செய்வார்; மனதுருக்கத்தைக் காண்பித்து, நம் வாழ்வைப் புதுப்பித்து, அளவற்ற விதத்தில் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார்.
இந்த வார்த்தை, முழுமையாக அவரிடம் திரும்பவும், அவருடைய வாக்குத்தத்தங்களில் நடக்கவும் நம் இருதயங்களை உற்சாகப்படுத்துவதாக.
சிந்தனைக்கு: என் மனம் முழுவதும் அவரை நோக்கித் திரும்பும் போது, என் வாழ்க்கையில் சிதறியுள்ள எல்லாவற்றையும் அவர் இரக்கத்தால் சேர்த்து, அவர் தயார் செய்த நிறைவிற்குள் என்னை நடத்துவாரென்று நம்புகிறேனா?

All to Jesus we surrender. That’s how a blessing happens .He not only restores but blesses more than we seek for great is his faithfulness !!
ReplyDelete