Blog Y3 854 - "Loving Him without Compromise"

You who love the Lord, hate evil! He preserves the souls of His saints; He delivers them out of the hand of the wicked. Psalms 97:10.

The first and foremost calling in our lives is to love the Lord with all our heart and soul. When we truly love God, we begin to hate what He hates. His divine nature starts to dwell within us, shaping our thoughts, desires, and actions.

A genuine love for God leaves no room for compromise with the evil of this world. We cannot walk in agreement with worldly ways that oppose His holiness. Instead, we are called to stand apart, reflecting His righteousness in our daily lives.

When we live in this way, God sees us as His righteous ones, His saints. And to His saints, He gives a precious promise: He preserves their souls and delivers them from the hands of the wicked.

Our soul is of great eternal value. When our journey on this earth ends, and we close our eyes, our soul, being preserved by God, will go safely into His presence.

Even while we live in this world, our loving Father protects us. He guards us from evil, rescues us from wicked people, and helps us escape from their harmful plans.

May we continue to love the Lord wholeheartedly, hate evil without compromise, and rest in His faithful protection.

Reflection: Am I turning my heart fully toward Him, choosing to reject anything that pulls me away from His holiness and trusting that He guards my life with unfailing care each day?

கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.  சங்கீதம் 97:10.

நம் வாழ்வில் முதலாவதும் முக்கியமானதுமான அழைப்பு, நம் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கர்த்தரில் அன்புகூருவதாகும். நாம் உண்மையாகவே தேவனில் அன்புகூரும்போது, அவர் வெறுப்பதை நாமும் வெறுக்கத் தொடங்குகிறோம். அவருடைய தெய்வீக சுபாவம் நமக்குள் வாசம்பண்ணத் தொடங்கி, நம் எண்ணங்களையும், விருப்பங்களையும், செயல்களையும் வடிவமைக்கிறது.

தேவன் மீதான உண்மையான அன்பு, இவ்வுலகத்தின் தீமையோடு சமரசம் செய்துகொள்ள எந்த இடத்தையும் அளிப்பதில்லை. அவருடைய பரிசுத்தத்திற்கு எதிரான உலகப் பிரகாரமான வழிகளோடு நம்மால் இணங்கி நடக்க முடியாது. மாறாக, நம்முடைய அன்றாட வாழ்வில் அவருடைய நீதியை வெளிப்படுத்தி, பிரித்தெடுக்கப்பட்டவர்களாக நிற்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் இவ்விதமாய் வாழும்போது, தேவன் நம்மைத் தம்முடைய நீதிமான்களாகவும், தம்முடைய பரிசுத்தவான்களாகவும் பார்க்கிறார். மேலும் தமது பரிசுத்தவான்களுக்கு அவர் ஒரு விலையேறப்பெற்ற வாக்குத்தத்தத்தை அளிக்கிறார்: அவர் அவர்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.

நம் ஆத்துமா மாபெரும் நித்திய மதிப்புடையது. இந்தப் பூமியில் நம்முடைய பயணம் முடிந்து நாம் கண்களை மூடும்போது, தேவனால் பாதுகாக்கப்பட்ட நம் ஆத்துமா, பத்திரமாக அவருடைய சமூகத்திற்குச் செல்லும்.

இந்த உலகத்தில் நாம் வாழும்போதே, நம் அன்பான பிதா நம்மைப் பாதுகாக்கிறார். அவர் நம்மைத் தீமையிலிருந்து காத்து, துன்மார்க்கர்களிடமிருந்து நம்மை மீட்டு, அவர்களின் தீங்கு விளைவிக்கும் திட்டங்களிலிருந்து நாம் தப்ப உதவுகிறார்.

நாம் தொடர்ந்து முழு இருதயத்தோடு கர்த்தரில் அன்புகூர்ந்து, எவ்வித சமரசமுமின்றித் தீமையை வெறுத்து, அவருடைய உண்மையுள்ள பாதுகாப்பில் இளைப்பாறுவோமாக.

சிந்tதிக்க: அவருடைய பரிசுத்தத்தை விட்டு என்னை விலக்கி இழுக்கும் அனைத்தையும் நிராகரிக்கத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு நாளும் அவர் என் வாழ்வை மாறாத அக்கறையோடு பாதுகாக்கிறார் என்று விசுவாசித்து, என் இருதயத்தை நான் முழுமையாக அவரை நோக்கித் திருப்புகிறேனா?

 

Comments

  1. God indeed rescues us from harmful situations and wicked !For the evil will perish.
    Through his strength we can conquer anything. When you reach the end of your strength ,you find the beginning of lords grace!

    Micah 4:13 states -
    Arise, and tread, O daughter of Sion: for I will make thy horn iron, and thy hoofs I will make brass: and thou shalt beat in pieces many peoples, and shalt immolate the spoils of them to the Lord, and their strength to the Lord of the whole earth.
    Amen

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"