Blog Y3 873 - "Living a Life of Praise"
Whoever offers praise glorifies Me; And to him who orders his conduct aright I will show the salvation of God. Psalms 50:23.
In the olden days, before Christ came into the world, altars were used for sacrifices and offerings for sin. People brought many kinds of offerings before God upon those altars. But now, we no longer need to offer such sacrifices, because our Lord Jesus Christ gave Himself as the perfect and living sacrifice for our sins.
Today, God desires from us the sacrifice of praise and a life that is upright in His sight. These are the sweet aromas that our loving Heavenly Father delights in. In every situation, we should praise God with thankful hearts. Even in difficult times, when we choose to offer praise and worship, we can witness and experience His mighty deliverance.
A life that pleases the Lord is a life filled with gratitude, praise, and obedience. When we continually choose to walk with Him and honor Him in our conduct, He reveals more and more of the beauty and fullness of His salvation in our lives.
May our hearts always overflow with thanksgiving and praise unto our Lord Jesus Christ.
Reflection: Am I choosing to exalt God in every season, allowing gratitude and obedience to guide my steps so I may witness the fullness of what He desires to reveal?
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். சங்கீதம் 50:23.
பழைய காலங்களில், கிறிஸ்து உலகத்திற்கு வருவதற்கு முன்பு, பாவத்திற்கான பலிகளுக்கும் காணிக்கைகளுக்கும் பலிபீடங்கள் பயன்படுத்தப்பட்டன. மக்கள் அந்தப் பலிபீடங்களின் மேல் தேவனுக்கு முன்பாகப் பலவிதமான காணிக்கைகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்பொழுது, நாம் அப்படிப்பட்ட பலிகளைச் செலுத்த வேண்டியதில்லை; ஏனென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே பூரணமான மற்றும் ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்.
இன்று, தேவன் நம்மிடமிருந்து துதியின் பலியையும், அவருடைய பார்வையில் செம்மையான ஒரு வாழ்க்கையையுமே விரும்புகிறார். இவையே நம் அன்பான பரம பிதா பிரியப்படுகிற சுகந்த வாசனையாக இருக்கின்றன. எல்லா சூழ்நிலைகளிலும், நாம் நன்றியுள்ள இருதயத்தோடு தேவனைத் துதிக்க வேண்டும். கடினமான நேரங்களில் கூட, நாம் அவரைத் துதித்து ஆராதிக்கத் தேர்ந்தெடுக்கும்போது, அவருடைய வல்லமையான விடுதலையை நாம் காணவும் அனுபவிக்கவும் முடியும்.
கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை என்பது நன்றி, துதி, மற்றும் கீழ்ப்படிதல் நிறைந்த வாழ்க்கையாகும். நாம் தொடர்ந்து அவரோடு நடக்கவும், நம்முடைய நடத்தையில் அவரைக் கனப்படுத்தவும் தேர்ந்தெடுக்கும்போது, அவர் தமது இரட்சிப்பின் அழகையும் பரிபூரணத்தையும் நம் வாழ்வில் மென்மேலும் வெளிப்படுத்துகிறார்.
நம் இருதயங்கள் எப்பொழுதும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நேராக நன்றியினாலும் துதியினாலும் வழிந்தோடுவதாக.
சிந்திக்க: எல்லா காலங்களிலும் தேவனை உயர்த்தத் முடிவு செய்து, நன்றியும் கீழ்ப்படிதலும் என் நடைகளை வழிநடத்த அனுமதித்து, அவர் வெளிப்படுத்த விரும்பும் நிறைவைக் காண நான் வாழ்கிறேனா?

Well explained
ReplyDeleteYes lord we praise you for you have committed great miracles in our lives. We submit our selves with reverence and obedience to live with gratitude ,a life that please you. Amen.
ReplyDelete