Peace be within your walls, Prosperity within your palaces. Psalm 122:7.
We often take this promise for granted, but every promise of God carries a condition. In this passage, God asks us to pray for Jerusalem and love Jerusalem. This means not only the physical city but also its spiritual meaning. Spiritually, Jerusalem represents God’s presence, God’s people, the church's unity among believers, and God’s kingdom.
So, loving Jerusalem means loving God’s presence, praying for His people, standing for unity in the church, and seeking the growth of God’s kingdom.
Family is the first community God created in the Garden of Eden and the foundation of society. That is why the enemy attacks families so fiercely. If one family is shaken, many lives around them are affected.
But when we truly seek God, love His presence, and pray faithfully for His people and kingdom, His promise follows us:
“Peace be within your walls,
Prosperity within your palaces.”
God will fill our homes with His peace, protection, unity, joy, and spiritual prosperity. A family blessed by God becomes a blessing to the church, society, and future generations.
Reflection: Will you choose to pursue God’s presence with a sincere heart as you desire His peace to fill your home and shape your family into a place touched by His blessing?
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. சங்கீதம் 122:7.
நாம் அடிக்கடி இந்த வாக்குத்தத்தத்தை சாதாரணமாக எண்ணுகிறோம், ஆனால் தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தமும் ஒரு நிபந்தனையைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில், எருசலேமுக்காக ஜெபிக்கவும், எருசலேமை நேசிக்கவும் தேவன் நம்மை அழைக்கிறார். இது உலகிலுள்ள நகரத்தை மட்டுமல்ல, அதனுடைய ஆவிக்குரிய அர்த்தத்தையும் குறிக்கிறது. ஆவிக்குரிய பிரகாரமாக, எருசலேம் தேவனுடைய சமூகம், தேவனுடைய ஜனங்கள், விசுவாசிகளுக்கு இடையிலான சபையின் ஐக்கியம் மற்றும் தேவனுடைய ராஜ்யம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
எனவே, எருசலேமை நேசிப்பது என்பது தேவனுடைய சமூகத்தை நேசிப்பது, அவருடைய ஜனங்களுக்காக ஜெபிப்பது, சபையில் ஐக்கியத்திற்காக நிற்பது மற்றும் தேவனுடைய ராஜ்யத்தின் வளர்ச்சியைத் தேடுவது என்பதாகும்.
ஏதேன் தோட்டத்தில் தேவன் உருவாக்கிய முதல் சமூகம் மற்றும் சமுதாயத்தின் அடித்தளம் குடும்பமே. அதனால்தான் சத்துரு குடும்பங்களை இவ்வளவு கடுமையாகத் தாக்குகிறான். ஒரு குடும்பம் அசைக்கப்பட்டால், அவர்களைச் சுற்றியுள்ள பலருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.
ஆனால் நாம் உண்மையாகவே தேவனைத் தேடி, அவருடைய சமூகத்தை நேசித்து, அவருடைய ஜனங்களுக்காகவும் ராஜ்யத்திற்காகவும் உண்மையோடு ஜெபிக்கும்போது, அவருடைய வாக்குத்தத்தம் நம்மைப் பின்தொடர்கிறது:
"உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும்,
உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக."
தேவன் தம்முடைய சமாதானம், பாதுகாப்பு, ஐக்கியம், மகிழ்ச்சி மற்றும் ஆவிக்குரிய சந்தோஷம் ஆகியவற்றால் நம் வீடுகளை நிரப்புவார். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு குடும்பம் சபைக்கும், சமுதாயத்திற்கும், எதிர்கால சந்ததியினருக்கும் ஆசீர்வாதமாக மாறுகிறது.
சிந்திக்க: அவருடைய சமாதானம் உங்கள் இல்லத்தை நிரப்பவும், அவருடைய ஆசீர்வாதம் பெற்ற ஒரு இடமாக உங்கள் குடும்பத்தை வடிவமைக்கவும் நீங்கள் வாஞ்சிக்கும்போது, உண்மையான இருதயத்தோடு தேவனுடைய சமூகத்தைத் நாடுவீர்களா?
Comments
Post a Comment