Blog Y3 895 - "Pray with Sincere Faith"

Confess your trespasses to one another, and pray for one another, that you may be healed. The effective, fervent prayer of a righteous man avails much. James 5:16.

Who is a righteous person?

A righteous person is not someone who has never sinned, but someone who has been cleansed by the precious blood of Jesus Christ and has confessed their sins before Him. Through Christ, we are made righteous in the sight of God. He does not condemn those who come to Him in repentance. Instead, He sees us as forgiven, blameless, and accepted through His Son.

As we walk with Him each day, He helps us pursue holiness and grow in righteousness. If we are sincerely following Him and allowing Him to transform us, then this verse speaks about us. God is talking about you and me.

The Lord is looking for fervent prayer, not merely words spoken from our lips or prayers offered out of routine and tradition. He desires prayers that come from a heart filled with faith, sincerity, and deep fellowship with Him. When we pray in the Spirit and pour out our hearts before Him, our prayers become a sweet aroma in His presence.

Reflection: Have you taken time to bring your heart honestly before God, trusting that sincere prayer carries power when offered with humility and faith?

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. யாக்கோபு 5:16.

நீதிமான் என்பவர் யார்?

நீதிமான் என்பவர் ஒருபோதும் பாவம் செய்யாதவர் அல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவப்பட்டு, தங்களின் பாவங்களை அவருக்கு முன்பாக அறிக்கையிட்டவர்கள் ஆவர். கிறிஸ்துவின் மூலமாக, நாம் தேவனுடைய பார்வையில் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். மனஸ்தாபத்தோடு தன்னிடம் வருகிறவர்களை அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை. அதற்குப் பதிலாக, அவர் தமது குமாரன் மூலமாக நம்மை மன்னிக்கப்பட்டவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவும் காண்கிறார்.

நாம் ஒவ்வொரு நாளும் அவரோடு நடக்கும்போது, பரிசுத்தத்தைத் தொடரவும், நீதியில் வளரவும் அவர் நமக்கு உதவுகிறார். நாம் உண்மையான இருதயத்தோடு அவரைப் பின்பற்றி, அவர் நம்மை உருமாற்ற அனுமதித்தால், இந்த வசனம் நம்மைப் பற்றித்தான் பேசுகிறது. தேவன் உங்களையும் என்னையும் பற்றித்தான் பேசுகிறார்.

கர்த்தர் ஊக்கமான ஜெபத்தையே எதிர்பார்க்கிறார், வெறும் உதடுகளினால் பேசும் வார்த்தைகளையோ அல்லது வழக்கத்திற்காகவும் பாரம்பரியத்திற்காகவும் செய்யப்படும் ஜெபங்களையோ அல்ல. விசுவாசம், உண்மைத்தன்மை மற்றும் அவரோடான ஆழமான ஐக்கியம் நிறைந்த இருதயத்திலிருந்து வரும் ஜெபங்களையே அவர் விரும்புகிறார். நாம் ஆவியோடும் உண்மையோடும் ஜெபித்து, நம் இருதயங்களை அவருக்கு முன்பாக ஊற்றும்போது, நம்முடைய ஜெபங்கள் அவருடைய பிரசன்னத்தில் ஒரு சுகந்த வாசனையாக மாறுகின்றன.

சிந்தனை: மனத்தாழ்மையுடனும் விசுவாசத்துடனும் ஏறெடுக்கப்படும் உண்மையான ஜெபத்திற்கு வல்லமை உண்டு என்பதை நம்பி, உங்கள் இருதயத்தை நேர்மையாகக் தேவனின் முன் கொண்டுவர நேரம் ஒதுக்கியுள்ளீர்களா?

 

Comments

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"

"Blog Y2 654 - "Lifted in God's Strength"

"Blog Y2 620 - "Joy Comes In His Time"

"Blog Y2 635 - "True Joy in His Presence at Church"

"Blog Y2 607 - Is My Temple Truly Holy?"