Blog Y3 896 - "Safe in His Constant Watch"
For thus says the Lord of hosts: ‘He sent Me after glory, to the nations which plunder you; for he who touches you touches the apple of His eye. Zechariah 2:8.
Our eyes are one of the most sensitive parts of our bodies. Whenever something comes close to our eyes, our eyelids automatically close to protect them. It is a natural response designed to guard something precious and delicate.
In this verse, our mighty God, the Lord of Hosts, the Commander of heavenly armies, the Creator of heaven and earth, and our loving Heavenly Father, gives us a beautiful assurance. He declares that whoever touches His children touches the apple of His eye. What a remarkable expression of His love, care, and protection!
God watches over us continually. His eyes are always upon His children. He surrounds us like a wall of fire, shielding us from dangers seen and unseen. His protection is not distant or impersonal; it is intimate and deeply personal. Just as a person instinctively protects their eyes, our Heavenly Father zealously guards those who belong to Him.
What a comforting thought! If anyone seeks to harm us, they must first face the Lord Himself. Nothing can touch our lives without His knowledge and permission. Though we live in a world filled with evil, uncertainty, and opposition, we can rest in the confidence that God’s special protection surrounds us every moment.
Therefore, let us place ourselves completely into His loving hands. Let us trust Him, walk in obedience, and remain under His care. He will protect us, guide us, and accomplish His perfect will in our lives.
Reflection: Do you believe that God protects you with deep affection, keeping you secure when pressures rise and circumstances seem beyond your understanding?
பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். சகரியா 2:8.
நம்முடைய கண்கள் நம் உடலின் மிக முக்கிய பாகங்களில் ஒன்றாகும். ஏதேனும் ஒன்று நம் கண்களுக்கு அருகில் வரும்போதெல்லாம், நம் இமைகள் அவற்றைப்பாதுகாக்க தானாகவே மூடிக்கொள்கின்றன. இது விலைமதிப்பற்ற மற்றும் மென்மையான ஒரு பொருளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இயற்கையான செயலாகும்.
இந்த வசனத்தில், நமது சர்வவல்லமையுள்ள தேவனும், சேனைகளின் கர்த்தரும், பரலோக சேனைகளின் அதிபதியும், வானத்தையும் பூமியையும் படைத்தவரும், நம்மை நேசிக்கும் பரலோகப் பிதாவுமானவர் நமக்கு ஒரு அழகான உறுதியை அளிக்கிறார். தம்முடைய பிள்ளைகளைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான் என்று அவர் அறிவிக்கிறார். அவருடைய அன்பு, பராபரிப்பு மற்றும் பாதுகாப்பின் எவ்வளவு வியக்கத்தக்க வெளிப்பாடு இது!
தேவன் நம்மைத் தொடர்ந்து கண்ணோக்குகிறார். அவருடைய கண்கள் எப்போதும் தம்முடைய பிள்ளைகள் மேல் இருக்கின்றன. அவர் நம்மைச் சுற்றி ஒரு அக்கினி மதிலைப் போல இருந்து, காணும் மற்றும் காணாத ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறார். அவருடைய பாதுகாப்பு தூரமானதோ அல்லது அலட்சியமானதோ அல்ல; அது மிகவும் நெருக்கமானதும் தனிப்பட்ட முறையிலானதுமாகும். ஒரு நபர் இயல்பாகவே தன் கண்களை எவ்வாறு பாதுகாக்கிறாரோ, அதேபோல நம்முடைய பரலோகப் பிதாவும் தமக்குச் சொந்தமானவர்களை மிகுந்த வாஞ்சையோடு பாதுகாக்கிறார்.
எவ்வளவு ஆறுதலான ஒரு சிந்தனை! யாராவது நமக்குத் தீங்கு செய்ய நினைத்தால், அவர்கள் முதலில் கர்த்தரையே எதிர்கொள்ள வேண்டும். அவருடைய அறிவும் அனுமதியும் இல்லாமல் எதுவும் நம் வாழ்க்கையைத் தொட முடியாது. தீமையும், நிச்சயமற்ற தன்மையும், எதிர்ப்புகளும் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்தாலும், தேவனுடைய விசேஷித்த பாதுகாப்பு ஒவ்வொரு கணமும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்ற நம்பிக்கையில் நாம் அமைதியாய் இருக்கலாம்.
எனவே, நம்மை முழுமையாக அவருடைய அன்பான கரங்களில் ஒப்படைப்போம். அவரை நம்பி, கீழ்ப்படிதலோடு நடந்து, அவருடைய பராமரிப்பின் கீழ் நிலைத்திருப்போம். அவர் நம்மைப் பாதுகாத்து, வழிநடத்தி, நம் வாழ்வில் தமது பூரண சித்தத்தை நிறைவேற்றுவார்.
சிந்திக்க: நெருக்கடிகள் அதிகரிக்கும் போதும், சூழ்நிலைகள் உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கும் போதும், தேவன் உங்களை மிகுந்த அன்போடு பாதுகாத்து, பத்திரமாய் வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?

Comments
Post a Comment