Blog Y3 901 - "Speaking with Heaven’s Wisdom"

 

For I will give you a mouth and wisdom which all your adversaries will not be able to contradict or resist. Luke 21:15.

We need wisdom not only in how we live but also in how we speak. Without godly wisdom in our words, confusion and conflict can arise. Therefore, we must seek God’s wisdom to know whom to speak to, what to speak, when to speak, and how to speak.

When we are filled with the Holy Spirit, He becomes our guide and our source of wisdom. In these last days, we need heavenly wisdom more than ever, because the world is filled with evil. Our battle is not against flesh and blood, but against spiritual powers and forces of darkness.

The Lord promises to give us a mouth and wisdom that no one can successfully oppose. He Himself will speak through us and grant us divine understanding. When our words are directed by God’s wisdom, no adversary will be able to withstand them.

Let us seek the wisdom that comes from above and allow the Holy Spirit to guide every word we speak. Then our speech will glorify God, strengthen others, and bring victory in every situation.

Reflection: Are you allowing the Holy Spirit to direct your speech so your words carry insight and bring strength to others?

உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். லூக்கா 21:15.

நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில் மட்டுமல்ல, எப்படிப் பேசுகிறோம் என்பதிலும் நமக்கு ஞானம் தேவை. நம்முடைய வார்த்தைகளில் தெய்வீக ஞானம் இல்லையென்றால், குழப்பமும் மோதல்களும் ஏற்படக்கூடும். எனவே, யாரிடம் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை அறிந்துகொள்ள நாம் தேவனுடைய ஞானத்தைத் தேட வேண்டும்.

நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்போது, அவரே நம்மை வழிநடத்துகிறவராகவும் நம்முடைய ஞானத்தின் ஊற்றாகவும் மாறுகிறார். இந்த இறுதிக்காலங்களில், பரலோக ஞானம் நமக்கு முன்னெப்போதையும் விட அதிகமாகத் தேவைப்படுகிறது; ஏனெனில் உலகம் பொல்லாங்கினால் நிறைந்திருக்கிறது. நம்முடைய போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, ஆவிக்குரிய அதிகாரங்களோடும் அந்தகாரத்தின் வல்லமைகளோடும் ஆகும்.

யாரும் வெற்றிகரமாக எதிர்க்க முடியாத வாக்குவல்லமையையும், பேசும் திறமையையும், ஞானத்தையும் நமக்குத் தருவதாக கர்த்தர் வாக்குறுதி அளிக்கிறார். அவரே நம் மூலமாகப் பேசி, நமக்குத் தெய்வீகப் புத்தியைத் தருவார். நம்முடைய வார்த்தைகள் தேவனுடைய ஞானத்தால் வழிநடத்தப்படும்போது, எந்தவொரு எதிரியாலும் அவற்றிற்கு எதிராக நிற்க முடியாது.

பரத்திலிருந்து வரும் ஞானத்தை நாம் தேடுவோம், பரிசுத்த ஆவியானவர் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வழிநடத்த அனுமதிப்போம். அப்போது நம்முடைய பேச்சு தேவனை மகிமைப்படுத்தும், பிறரை பலப்படுத்தும், மேலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெற்றியைத் தரும்.

சிந்திக்க: உங்கள் வார்த்தைகள் அறிவை உணர்த்தி, மற்றவர்களுக்குப் பலனளிக்குமாறு, பரிசுத்த ஆவியானவர் உங்கள் பேச்சை வழிநடத்த நீங்கள் அனுமதிக்கிறீர்களா?

Comments

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"

"Blog Y2 654 - "Lifted in God's Strength"

"Blog Y2 620 - "Joy Comes In His Time"

"Blog Y2 635 - "True Joy in His Presence at Church"

"Blog Y2 607 - Is My Temple Truly Holy?"